முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
ஆகஸ்ட் 15-ல் சிரஞ்சீவியின் புதுக்கட்சி உதயம்!!

ஆகஸ்ட் 15-ல் சிரஞ்சீவியின் புதுக்கட்சி உதயம்!!

நட்சத்திரங்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் கலாச்சாரம் இன்றைக்கு அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் என்றில்லை. அண்டை மாநிலங்களிலும் இதே
நிலைமைதான்.

இந்த பட்டியலில் அடுத்து இடம் பெற உள்ளவர் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான, சிரஞ்சீவி.

இன்னும் அவர் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவே இல்லை. ஆனால் அவரது கட்சியில் சேர பல திரை நட்சத்திரங்கள் மட்டுமல்லாது பிற அரசியல் கட்சித்தலைவர்களும் வரிசையில் நிற்கின்றனர்.

1977-ல் ‘மனவூரி பண்டவுலு’ திரைப்படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையில் ஏறுமுகம் கண்டவர் இவர்.

செனனையில் கணக்காளராக இருந்து கொண்டு சினிமா வாய்ப்புத் தேடியவர்.

அதோடு பிலிம் இன்ஸ்டியூட்டில் நடிப்புக் கலை பயின்றவர். தமிழ்
மொழியும் இவருக்கு அத்துப்படி.

தனது 30 ஆண்டு கால சினிமாப் பயணத்தில் 148
தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டார்.

சினிமாவில் கொடிக்கட்டிப் பறப்பதோடு நிற்காமல் அரசியலில் கட்சிக்கொடியை பறக்க விடவும் தீர்மானித்து அதை அறிவித்தும் விட்டார். ஆந்திராவின் அதிக எண்ணிக்கையிலான காபு இனத்தைச் சேர்ந்தவர் இவர். ஆகவே இவருக்குச் சாதி ஓட்டும் விழும் என்பது உறிதியாகிவிட்டதால் மற்ற கட்சிக்காரர்கள் அலறுகிறார்கள்.

அடுத்த மே மாதம் ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் வர
உள்ளது. இந்நிலையில் சிரஞ்சீவி கட்சி ஆரம்பிக்க உள்ளார். இது குறித்து
அறிவிப்பு ஆகஸ்ட் 15-ம் தேதியும், அதைத் தொடர்ந்து ஐதராபாத்,
திருப்பதியில் பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடக்க உள்ளது.

என்.டி.ஆர் போல் சிரஞ்சீவியும் கட்சி தொடங்கிய குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.