முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
மர்மயோகி- கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மர்மயோகி- கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பல கோடி ரூபாய் செலவில் கமல் ஹாசன் தன் இயக்கத்தில் உருவாக்கப் போகும் புதிய வரலாற்றுத் திரைப்படம் மர்மயோகியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரமிட் சாய்மிரா சாமிநாதன் - நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து இருவரும் கூட்டாக நேற்று அறிக்கை விடுத்துள்ளனர்.

இதில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:

சமீபகாலமாக நான் எழுதி, இயக்கி தயாரிக்கும் மர்மயோகி பற்றிய பல புனை சுருட்டுகள் செய்திகளாக வந்த வண்ணம் உள்ளன.மர்மயோகி பற்றிய பெரும்பாலான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாக இருப்பது எங்களை பொறுத்தவரை ஆரோக்கியமான விளம்பரமில்லை.ஆதாரமற்ற செய்திகள் அவதூறுக்கு நிகரானது என்பதே என் தாழ்மையான கருத்து.

நவீன கார்ப்பரேட் யுகத்தில், பத்திரிக்கை வாயிலாக வியாபாரம் பேசுவது தொழில் ஒழுக்கமல்ல.உலகத் தரமான படைப்பு பல மில்லியன் டாலர்கள் செலவில் தயாராகும், பன்மொழிப் படமான மர்மயோகி உலக தரப் படமாகவும் உங்களுக்கு பரிமாறப்பட வேண்டும் என்பதில் ராஜ்கமல் நிறுவனமும், பிரமிட் சாய்மீரா நிறுவனமும் பேரார்வத்துடன் இயக்கி வருகின்றன. விரைவில் தொடக்க விழா பற்றி செய்திகளை அறிவிப்போம், என்று கூறியுள்ளார்.

கமல் இப்படி அறிக்கை வெளியிட்டதற்குக் காரணம், இந்தப் படத்தை பிரமிட் சாய்மிரா நிறுவனம் கைவிட்டுவிட்டது என்றும், ரஜினி மகள் சௌந்தர்யாவும் வார்னர் பிரதர்சும் இணைந்து தயாரிக்கப் போகின்றனர் என்றும் வெளியான செய்திகள்தான். இன்னொன்று இப்படத்தில் பட்ஜெட். ரூ.100 கோடியில் உருவாகும் படம் இது என ஆரம்பத்தில் கமல் சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது கமல்-சாய்மிரா இருவருமே, படத்தின் பட்ஜெட் குறித்து எந்த தகவலும் இப்போது சொல்வதற்கில்லை எனக் கூறியுள்ளனர்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.