தமிழ் படங்களில் நடிப்பதற்கு நடிகை புளோராவுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொண்டது நடிகர் சங்கம். இனி அவர் தமிழ்ப் படங்களில் தாராளமாக நடிக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கஜேந்திரா, குஸ்தி, சாரி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை புளோரா.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, பி.வாசு டைரக்டு செய்துள்ள குசேலனின் தெலுங்குப் பதிப்பில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
கருணாஸ் கதாநாயகனாக நடித்துள்ள திண்டுக்கல் சாரதியிலும் தடை மீறி சத்தமில்லாமல் நடித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு புளோரா அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டபோது ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் கையில் வைத்திருந்த அழைப்பிதழ் போலியானது என்றும் அவருடன் அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணின் விசா போலியானது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து புளோரா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், புளோராவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அவருடைய பாஸ்போர்ட்டை கோர்ட்டு திரும்ப அவரிடமே ஒப்படைத்துவிட்டது. இனி புளோரா வெளிநாடுகளுக்குச் செல்லலாம் என்று கோர்ட்டு அனுமதித்திருக்கிறது.
இதைத்தொடர்ந்து, தென்னிந்திய நடிகர் சங்கமும் அவருக்கு விதித்திருந்த தடையை நீக்கிவிட்டது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகிய இருவரும், புளோரா இனிமேல் தமிழ் படங்களில் தாராளமாக நடிக்கலாம். எந்தத் தடையுமில்லை, என்று அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.
பேட்டி
இந்த தகவலை நடிகை புளோராவே நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
நான் இதுவரை 30 படங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு கடந்த மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்கள் மிகவும் சோதனை காலமாக அமைந்தன. செய்யாத குற்றத்துக்காக நான் பழனி சுமந்தேன்.
என் பாஸ்போர்ட்டை கோர்ட்டு என்னிடம் மீண்டும் ஒப்படைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். இந்த வழக்கில் என் மீது எந்தக் குற்றமும் இல்லை என்பதை ஓரளவு நிரூபித்துவிட்டேன். அதற்கு இப்போது எனக்குக் கிடைத்துள்ள பரிசுதான் இந்தத் தடை நீக்கம், என்றார்.
ப்ளோரா என்ற பெயர் ராசியில்லை என்பதால் இப்போது எண் கணித ஜோதிடப்படி மயூரி என்று மாற்றிக்கொண்டிருக்கிறார். இந்தப் பெயரில்தான் இனிமேல் நடிக்கப்போகிறாராம்.
‘தாராளமா’ நடிங்க…!
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply