முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
பெங்களூர் திரும்பும் மூடில் ஷெரீன்!

பெங்களூர் திரும்பும் மூடில் ஷெரீன்!

என்னதான் திருந்தி நல்லவராக நடந்து காட்டினாலும், வாய்ப்புகள் மட்டும் வர மறுக்கின்றன ஷெரீனுக்கு. வாய்ப்புகள் வராவிட்டாலும் பரவாயில்லை, வந்த வாய்ப்புகளும் கை நழுவிப் போவது அம்மணியை மீண்டும் பெங்களூருக்கே திரும்பி விடலாமா என யோசிக்க வைத்துள்ளது!

சமீபத்தில் அவர் நாயகியாக ஒப்பந்தமான படம் அகம் புறம். ஷாமுக்கு ஜோடியாக போட்டோ செஷனிலிலெல்லாம் உற்சாகமாகக் கலந்து கொண்டு படு கவர்ச்சியாக போஸ்கள் கொடுத்தார்.

இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில், இப்போது கீரத் நடித்துக் கொண்டிருக்கிறார் அந்த வேடத்தில்! காரணம் தயாரிப்பாளர் திருமலைக்கு, ஷெரீனை விட கீரத் ரொம்பப் பிடித்துப் போய்விட்டாராம்.

எங்கிட்ட என்ன குறை… சொல்லாம கொள்ளாம என்னைப் படத்திலிருந்து தூக்கி அசிங்கப்படுத்தறார் அந்தத் தயாரிப்பாளர். இத்தனைக்கும் அவர்கள் சொன்னமாதிரியெல்லாம் ஒத்துழைப்பு கொடுத்தேன். கேட்ட தேதிகளெல்லாம் ஒதுக்கியிருந்தேன்… எனப் புலம்புகிறார்.

ஏற்கெனவே எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்துக் கொண்டிருந்த வில் படமும் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேசாமல் பெங்களூர் திரும்பிவிடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார் ஷெரீன்!






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.