ஒன்றா இரண்டா… ஆறு நாயகிகள், அதுவும் அம்சமான முன்னணி நடிகைகள்தான் வேண்டுமென்றால்… எங்கே போவது?
இருக்கிற நாயகிளில் பலர் 6 பேரில் ஒருவரா.. ம்ஹூம் நான் தனியாத்தான் நடிப்பேனாக்கும் என முகத்தை வெட்டிக் கொண்டு போக, கிடைத்த நாயகிகளை எல்லாம் வளைத்துப் போட ஆரம்பித்துவிட்டார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் தனது ராஜாதி ராஜாவுக்காக.
அப்படி அவர் லேட்டஸ்டாக வளைத்திருப்பது கத்தாழ கண்ணழகி ஸ்னிக்தாவை. சந்தியா வேண்டாமென்று மறுத்த வேடத்தில் இப்போது ஸ்னிக்தாதான் நடிக்கப் போகிறார்.
இப்போது மிஷ்கினுக்கு ஜோடியாக நந்தலாலாவில் நடித்து வரும் ஸ்னிக்தா, அந்த ஷூட்டிங் முழுமையாக முடிந்த பிறகுதான் இந்தப் படத்துக்கு வருவேன் என்ற ஒரேயொரு நிபந்தனையை மட்டும் விதித்துள்ளாராம்.
ராஜாதி ராஜாவில் ஸ்னிக்தா தவிர, மீனாட்சி, காம்னா, சமிக்ஷா, மும்தாஜ் மற்றும் கிரண் நடிப்பது தெரியும்தானே…
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply