முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
உயரப் பறக்கும் ஜெனிலியா!

உயரப் பறக்கும் ஜெனிலியா!

இந்தியில் அமீர்கான் தயாரிப்பில் அவரது மருமகன் நடித்து வெளியாகியுள்ள ஜானே து… ந ஜானே யா திரைப்படம் அதிரடியாக ஹிட் ஆகியிருப்பதில் அமீர்கானை விட அதிக சந்தோஷத்திலிருக்கிறார் ஜெனிலியா.

இருக்காதா பின்னே… அவர்தானே படத்தின் நாயகி!

தென்னிந்திய படவுலகிலிருந்து இரண்டாண்டுகளுக்கு முன்பே இந்திக்குப் போன ஆசினின் முதல் படமான கஜினி இன்னமும் வெளி வரவேயில்லை. ஆனால் இப்போதுதான் பாலிவுட் போன ஜெனிலியாவின் படம் தொடங்கப்பட்ட வேகத்திலேயே முடிவடைந்து வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இந்தப் படம் வருவதற்காகத்தான் அமீர்கான் தனது கஜினியை தாமதமாக ரிலீஸ் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஜெனிலியாவைத் தேடி மிகப் பெரிய வாய்ப்புகள் வந்த வண்ணமுள்ளனவாம் இந்தியில்.

இனி தென்னிந்திய மொழிப் படங்களுக்கு குட்பைதானா…

இந்த வழக்கமான கேள்விக்கு ஜெனிலியா தரும் வழக்கமான பதில்…

அப்படியெல்லாம் இல்லை. இந்திப் படவுலகம் எனக்குப் புதிதல்லை. நானும் இந்த ஊர்ப் பெண்தானே. இந்த மாதிரி ஒரு வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன். ஜெயித்தும்விட்டேன். சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் எனக்கு மொழி வேறுபாடுகள் கிடையாது. எந்த மொழிப் படமாக இருந்தாலும், நல்ல ரோல், நல்ல சம்பளமென்றால் நான் நடிக்கத் தயார்… என்கிறார்.

நல்ல பாலிஸி…






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.