பட்டாளம் படத்தின் மூலம் நடிகர் பாண்டுவின் மகன் குரு கதாநாயகன் ஆகிறார்.
சில்லுன்னு ஒரு காதல் இயக்குநர் கிருஷ்ணா இயக்கும் புதிய படம் பட்டாளம். லிங்குசாமி தயாரிக்கும் இந்தப் படத்தின் கதாநாயகன் புதுமுகம் குரு.
இந்தப் படத்துக்காக இவரை தேர்ந்தெடுத்தபோது, அவர் பாண்டுவின் மகன் என்பது இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்குமே தெரியாது. ஹீரோவுக்கு ஆள் தேடுகிறார்கள் என்பது தெரிந்ததுமே, குரு எல்லோரையும் போல இயக்கிநருப் பார்கத்திருக்கிறார்,. அவரது தோற்றம் பிடித்துப் போக உடனே ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம். சூட்டிங் போகும் சமயத்தில்தான் குருவின் தந்தை பிரபல நடிகர் பாண்டு என்பதே தெரிந்திருக்கிறது. அதன் பிறகு குருவுக்கு நடனம், சண்டை போன்றவற்றில் போதிய பயிற்சி கொடுத்து படப்பிடிப்புக்கு பெங்களூர் கூட்டிப் போனார்களாம்.
பாண்டுவும் தன் மகன் விரும்பும் வேலையைச் செய்து கொள்ளட்டும் என விட்டுவிட்டாராம். அதனால்தான் கடைசி நிமிடம் வரை அவரது விருப்பத்தில் குறுக்கிடவில்லையாம்.
முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்து, இப்போது அடுத்த கட்டப் படப்பிடிப்புக்கு வெளிநாடு போகப் போகிறார்களாம்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply