முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
டைரக்டராகிறார் தனுஷ்

சென்னை: தனது அண்ணன் இயக்கத்தில் அறிமுகமாகி தற்போது முன்னணி இளம் ஹீரோவாகத் திகழும் தனுஷ், அடுத்த ஆண்டில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.

தற்போது சுராஜ் இயக்கும் `படிக்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்புக்கு நடுவே பேட்டியளித்த தனுஷ், தாம் இயக்கவிருக்கும் படத்திற்கான கதையை தயார் செய்து விட்டதாகத் தெரிவித்தார்.

சரி. படத்தில் நீங்களே கதாநாயகனா? என்று கேட்டால், எனக்குப் பொருத்தமாக அந்த பாத்திரம் இல்லாமல் போனால், வேறு ஒருவரை கதாநாயகனாக நடிக்க வைப்பேன் என்கிறார் கொஞ்சமும் தயங்காமல்.

படத்தை இயக்க வேண்டும் என்று திடீரென்று முடிவெடுக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே தனக்குள் டைரக்‌ஷன் ஆசை இருந்து வந்ததாகவும், உரிய நேரம் எடுத்துக் கொண்டு இயக்க வேண்டும் என்பதற்காகவே காத்திருந்ததாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக டைரக்ஷன் குறித்து பயிர்சி எடுத்து வருகிறாராம். இவரது மனைவி ஐஸ்வர்யாவும் இப்போது மைத்துனர் செல்வராகவனிடம் டைரக்ஷன் கறஅறு வருவது குறிப்பிடத்தக்கது.

-லைவ் நியூஸ் சர்வீஸ்






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.