
உணர்ச்சி வேகத்தில் பலமுறை நிதானமிழந்தும், சக கலைஞர்ரகளின் மனதைப் புண்படுத்தும் விதத்திலும் பேசுவதில், நடந்து கொள்வதில் பாரதிராஜாவுக்கு நிகர் அவரே. சமீபத்தில் தனது புதிய தொலைக்காட்சித் தொடர் குறித்தும், திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதம் குறித்தும் பாரதிராஜா பேட்டி அளித்தார்.
இதில் சம்பந்தமே இல்லாமல் ரஜினியை தாக்கிப் பேசினார். திரையுலகில் குள்ளமணியிலிருந்து பாரதிராஜா வரை அனைவரும் பாரபட்சமில்லாமல் ரஜினி பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் பப்ளிசிட்டிக்காக.
ரஜினியோடு சேர்ந்து கொடி பறக்குது என அரசியல் பஞ்ச் விட்டதையெல்லாம் இவர் மறந்துவிட்டார் போலிருக்கிறது.
அவர் அளித்த பேட்டியைப் படியுங்கள்….
நீங்களும் தொலைக்காட்சிக்கு வந்துவிட்டீர்களே?
சினிமாவில் சொல்லப்படுகிற முக்கியமான உணர்வுகளை தொலைக்காட்சி சீரியல்கள் தொலைத்து விடுகின்றன என்று விமர்சித்தவன்தான் நான். சினிமாவில் இரண்டேகால் மணி நேரத்தில் சொல்ல முடியாததை சீரியலில் விசாலமாகக் கூறலாம். சீரியல்களால் சினிமாவுக்கு பாதிப்பு இல்லை என்பதையும் இப்போது புரிந்துகொண்டேன். நானும் சீரியல் எடுக்க வந்துவிட்டேன்.
இந்த தொடர் பற்றி சொல்லுங்கள்…
இது மூன்று கிராமங்களில் உள்ள மூன்று குடும்பங்களில் நடக்கிற கதை. தலைமுறை தலைமுறையாக அந்த குடும்பத்திற்குள் இருந்துவரும் பாசப் பிணைப்புகள், பங்காளி உறவு, காதல் போராட்டங்கள் என பகையும், நேசமும் கலந்த கதை. என்னுடைய 16 வயதினிலே, கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா படங்களைப் போன்ற கிராமத்து வாழ்க்கையை இதில் பார்க்கலாம். தேனி வட்டார வழக்கில் இதை எழுத்திருக்கிறேன். கிராமத்துக் கலாச்சாரத்தை முழுமையாகச் சொல்லப்போகும் இத்தொடர், சினிமா பார்ப்பது போலவே இருக்கும்.
எத்தனை எபிசோடுகள் எடுப்பதாக திட்டம்?
ஒரு குடும்பத்து கதைக்கு நூறு எபிசோடுகள் என்றாலும் மூன்று குடும்பத்திற்கும் சேர்த்து முன்னூறு எபிசோடுகள். தேவை மற்றும் ரசிகர்களின் வரவேற்பைப் பொறுத்து மூவாயிரம் எபிசோடுகள் வரை எடுக்கலாம் நிரந்தரமாக (இதிலேயே இருந்துவிடுங்கள்!)
தமிழ்த் திரையுலகமே திரண்டு நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ளாதது ஏன்?
காவிரி பிரச்சனையில் நடிகர் நடிகைகளை திரட்டி நெய்வேலியில் நான் ஒரு போராட்டத்தை நடத்தினேன். அதற்கு ஒரு அர்த்தம் இருந்தது. ஆனால், அதற்கு மறுநாள் ஒரு நடிகர் தனியாக ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அவர் எதற்காக அப்படி தனியாக நடத்தினார் என்று இன்று வரை எனக்குப் புரியவில்லை. மற்றபடி இந்த புதிய உண்ணாவிரதத்தில் நான் பங்கு பெறாதது குறித்து சரத்குமாருக்கும் ராமநாராயணனுக்கும் கூறிவிட்டேன்.
ஒகேனக்கல் பிரச்சனையில் உங்கள் கருத்து என்ன?
மற்றவர்களிடம் உள்ள ஒற்றுமை, மொழி உணர்வு நம்மிடம் இல்லை. வந்தாரை வாழவைக்கும் நிலைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இந்த மண்ணின் மைந்தர்கள்தான் நாடாள வேண்டும். மண், மொழி, இனம் சம்பந்தப்பட்ட விஷயம் இது. (எப்போதோ கட்சி ஆரம்பிக்கப்போகும் ரஜினிக்கு இப்போதிலிருந்தே பயப்பட்டா எப்படி!)
சத்யராஜின் உண்ணாவிரதப் போராட்ட பேச்சு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
உண்ணாவிரத மேடையில் சத்யராஜ் தான் உணர்வுப்பூர்வமாக பேசினார். அந்த தமிழுணர்வை நான் வரவேற்கிறேன். அதேநேரம் சக நடிகர் பற்றி அவர் பேசியதை மேடை நாகரீகம் கருதி தவிர்த்திருக்கலாம். அவர் பேசியதில் மூன்றில் ஒரு பங்குதான் எனக்கு உடன்பாடு.
‘மண்ணின் மைந்தன்’ பாரதிராஜாவுக்கு சில கேள்விகள்:
இப்போது நாட்டை ஆள்பவர் தமிழர் இல்லையா?
ரஜினிகாந்த் என்ற மனிதர் சூப்பர்ஸ்டாராக இல்லாமல் போய்விட்டால், காவிரி பிரச்சினை தீர்ந்துவிடுமா?
மண், இனம், மொழி என்று மகாபோராளியாக காட்டிக் கொள்ளும் நீங்கள் காதலுக்கும் கல்யாணத்துக்கும் மட்டும் பக்கத்து மாநிலத்துக்கு- நாட்டுக்கு தாவுவீர்களோ?
அட, கஷ்ட காலமே…!
-எஸ்.எஸ்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply