முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
கட்டிப் பிடிக்க வந்த இளைஞரை கன்னத்தில் அறைந்த ஸ்ரேயா!

கட்டிப் பிடிக்க வந்த இளைஞரை கன்னத்தில் அறைந்த ஸ்ரேயா!

திருப்பதி: திருப்பதியில் சாமி கும்பிடுவதற்காக வந்திருந்த நடிகை ஸ்ரேயா, கோயில் வளாகத்தை விட்டு வெளியேறிய போது தன்னை கட்டியணைக்க முயன்ற வாலிபரை அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கு வருடப்பிறப்பு தினமான நேற்று அதிகாலை திருப்பதி வந்த நடிகை ஸ்ரேயா, அங்கு சுப்ரபாத தரிசனம் செய்தார். பின்னர் காலை 3.45 மணிக்கு கோயிலை விட்டு வெளியே வந்தார்.

அப்போது ஸ்ரேயாவை அடையாளம் கண்டு கொண்ட ஒரு இளைஞர் அவரை பின்தொடர்ந்து, கட்டியணைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரேயா அவரது கன்னத்தில் அறைந்து விட்டார்.

உடனே ஸ்ரேயாவின் பாதுகாவலர்கள் அந்த இளைஞரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாகவும், ஆனால் ஸ்ரேயா இதுகுறித்து புகார் அளிக்காததால், சில்மிஷம் செய்ய முயன்ற இளைஞர் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணையில் அந்த இளைஞர் திருமலையில் துப்புரவு பணிசெய்து வரும் ஹரி என்பது தெரியவந்துள்ளது.

அந்த இளைஞர் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றதால் தான் அவரை அறைந்ததாகவும், இதுபோன்ற சம்பங்கள் ஏற்படும் போது பெண்கள் தைரியமாக நடந்து கொள்ள வேண்டும் என நடிகை ஸ்ரேயா கூறியதாக நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

-எஸ்.எஸ்






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.