
சென்னை: தாடி கெட்டப்பிலிருந்து சாதா கெட்டப்புக்கு வந்துவிட்டார் அஜீத். முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்து விறுவிறுப்பாக தயாராகி வரும் ‘ஏகன்’ படத்தில் புதுப்புது மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன.
அய்ங்கரன் தயாரிக்கும் இந்தப் படத்தில் முதலில் நயன்தாரா மட்டும்தான் நாயகி. இப்போது இன்னொரு போனஸாக, பியா என்ற மும்பை அழகியைச் சேர்த்திருக்கிறார்கள்.
இவர் மும்பையின் பிரபலமான மாடல் அழகியாம்.
காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன் என மிரட்டலாகத் தயாராகும் ‘ஏகனி’ல், அஜித்தின் அப்பாவுக்கு இரு மனைவிகளாம். இதில் மூத்த மனைவியின் மகன்தான் அஜித். இரண்டாவது மனைவியான சுகாசினியின் மகனாக நவ்தீப் வருகிறாராம்.
பியாவைப் பிடித்துப் போட்டிருப்பது நவ்தீப்புக்கு ஜோடியாக நடிக்கத்தானாம். ஆனால் அஜீத்துடனும் சில காட்சிகளில் வருகிறாராம் இந்த பியா.
அப்படியே போகிறபோக்கில் அஜீத்துடனும் அவர் ஒரு டூயட் பாடுகிற மாதிரி ஒரு சிச்சுவேஷனை உருவாக்க முடியாதா ராஜூ சுந்தரத்தால்… அப்போதுதானே தல ரசிகர்கள் தலை கொள்ளாத உற்சாகத்தில் மிதப்பார்கள்!
-லைவ் நியூஸ் சர்வீஸ்
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply