
கொஞ்ச நாளாக கால்ஷீட் சொதப்பல் எதுவும் செய்யாமல் நல்லபிள்ளையாக இருந்து வந்த தனுஷ் மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.
இளம் நடிகர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிவரும் தனுஷ் தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்து விஜய், அஜீத், சூர்யா வரிசைக்கு முன்னேறத் துவங்கியுள்ளார்.
அவரது சமீபத்திய ரிலீசான யாரடி நீ மோகினியும் வணிக ரீதியாக நன்றாகவே போய்க் கெண்டிருக்கிறது.
இப்போது அவர் தனது அடுத்த படமான படிக்காதவனில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். இதில்தான் சிக்கலே முளைத்திருக்கிறது.
‘பொல்லாதவன்’ வெற்றிக்கு பிறகு ஜெமினி பிலிம் சர்க்யூட், விஜயா புரொடக்ஷன்ஸ் மற்றும் குரூப் கம்பெனி கதிரேசன் என மூன்று நிறுவனங்களிடம் அட்வான்ஸ் வாங்கியிருந்தாராம் தனுஷ்.
அட்வான்ஸ் வாங்கிய ‘சீனியாரிட்டி’ப்படி இப்போது அவர் ஜெமினி நிறுவனத்துக்குதான் அடுத்த படம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவரோ விஜயா நிறுவனத்தின் படத்தின் நடிக்கப் போய்விட்டதால் கடுப்பான ஜெமினி நிறுவனம் உடனே பெப்ஸியிடம் சொல்லி படத்தை நிJgத்தும் வேலைகளில் இறங்கிவிட்டது. இதனால் படிக்காதவன் படம் தொடங்கிய அன்றே நிறுத்தப்பட்டது.
விஷயம் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போனது. இருதரப்பையும் அழைத்து பஞ்சாயத்து செய்த சங்கத் தலைவர் ராமநாராயணன், முதலில் படிக்காதவன் படப்பிடிப்பு நடக்க ஒத்துழைப்பது என்றும், முதல்கட்டப் படப்பிடிப்புக்குப் பிறகு பிரச்சினையைப் பேசித் தீர்த்துக்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போதைக்கு படிக்காதவனுக்கு தடை நீங்கினாலும், பஞ்சாயத்து தொடர்கிறது…
- எஸ்.எஸ்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply