
யாருக்கும் அத்தனை சுலபத்தில் கிடைக்காத ஒரு வாய்ப்பு கிடைத்தும், அதை ‘ஏற்க மறுத்த’ தனது சாதனையை இப்போது பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லி ப்பளிசிட்டி தேடிவருகிறார் சதா.
என்ன வாய்ப்பு அது…
சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு நாயகியாக நடிப்பதுதான். சிவாஜி படத்தில் ஸ்ரேயா வேடத்தில் நடிக்க முதலில் ஷங்கர் அழைத்தது சதாவைத்தானாம். அந்நியனில் நடித்ததன் மூலம் இருவருக்குமிடையே நல்ல அன்டர்ஸ்டாண்டிங் இருந்த்தால் சதாவையே சூப்பர்ஸ்டாரின் ஜோடியாக்கிவிடும் திட்டத்தில் இருந்தாராம் ஷங்கர்.
படம் தொடங்குவதற்கு முன் இந்த விஷயத்தை சதாவிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் அவரோ இந்த விஷயத்தை ரொம்ப சாதாவாக எடுத்துக்கொண்டதோடு, அடுத்த நாளே தனக்கு இதில் ஆர்வமில்லை என்றும் கூறிவிட்டாராம். காரணம் அப்போது அவருக்கு இந்திப் படங்களில் நடிக்க அழைப்பு வந்திருந்ததாம்.
இந்தியில் நடித்தால் கோடி கோடியாகக் கொட்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. ஆனால் தமிழில் சுத்தமாக காணாமலே போய்விட்டார் சதா.
அவருக்கு பதில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயாவோ ஹாலிவுட் ரேஞ்சுக்குப் போய் கோடிகளை அள்ளிக் கொண்டிருக்கிறார்.
அடடா… ரஜினியுடன் நடிப்பதில் இத்தனை லாபமிருக்கிறதா என லேட்டாகப் புரிந்துகொண்ட சதா, தனது ஏமாற்றத்தை மறைக்க, ‘இந்திப்படத்துக்காக ரஜினி பட வாய்ப்பையே உதறியவளாக்கும் நான்’ என்ற ரேஞ்சுக்கு பீலா விட்டுக் கொண்டிருக்கிறாராம்.
இப்போது ராஜா பண்டேலா இயக்கத்தில் தில் தோ தீவானா ஹய் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக சதா நடித்து வருகிறார். வரும் ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வருகிறதாம். படம் வெளிவந்தால், பாலிவுட்டில் நிரந்தரமாக தங்கிவிட திட்டமிட்டுள்ளார் சதா.
ஆனாலும் அவரை ஹிந்தி பத்திரிகைகள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. படத்தில் இன்னொரு இணையான ஜீனத் அமன்-ராஜ் பப்பர் குறித்தே மும்பை பத்திரிகைகள் அதிகம் எழுதுகின்றனவாம்.
தமிழில் மாதவனோடு அவர் நடித்துள்ள ஒரு படமும் வருமா வராதா என்றே தெரியவில்லை. புதுப்பட வாய்ப்புக் கேட்டாலும் யாரும் தரத் தயாராக இல்லை. விட்டால் அக்கா வேடத்துக்கு கூப்பிடுவார்கள் எனும் நிலை.
என்னதான் செய்வார் சதா… அதான் புண்பட்ட உள்ளத்தை புருடா விட்டு ஆற்றிக் கொண்டிருக்கிறார்!
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply