
இப்போதெல்லாம் கவர்ச்சிப் புயல் நமீதா ரொம்பவே படுத்தி எடுப்பதாக கோடம்பாக்கம் புகார் மழை பொழிகிறது. இதுவரை இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்துகொண்டிருந்த இந்த சூரத் பார்ட்டி இப்போது ரொம்பவே ‘பந்தா’ காட்டுகிறாராம். காரணம் பில்லா, சண்ட என வரிசையாக வெற்றிப்படங்கள் அமைந்துவிட்டதுதானாம்.
இவர் நடிக்க இருந்த ‘மின்னலடிக்குது’ படத்திற்கான ஃபோட்டோ செஷன் முடிந்து ரொம்ப நாளாக கிடப்பில் இருக்கிறது. தற்போது அப்படத்தின் இயக்குனர் காளிமுத்து பட வேலையில் மும்முரம் காட்டத் துவங்க, நமீதா அம்மணியோ சம்பள விவகாரத்தில் முரண்டு பிடிக்கிறாராம்.
முன்பு பேசியபடி சம்பளத்தை தருவதற்கு இயக்குனர் தரப்பு தயாராக இருந்தாலும், நமீதாவோ ‘சண்டை’க்குப் பின் ‘என் ரேஞ்சே வேற’ என்கிறாராம்.
ஏற்கனவே நமீதா ஹீரோயினாக நடித்த ‘மாயா’ என்றொரு படத்தை தூசு தட்டிக் கொண்டிருக்கும் தயாரிப்பு பார்ட்டிகள் இப்போது அம்மணியிடம் போனால் எவ்வளவு கேட்பாரோ என மிரண்டு போய் நிற்கிறார்களாம்.
இதற்கிடையே நீதாவுக்கு குழந்தை இருப்பதாக யாரோ சிலர் வதந்தியைக் கொளுத்திப்போட, கோடம்பாக்கமே ‘அப்படியா…” என வாய் பிளந்து நிற்கிறது.
-வம்புராசா
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply