முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
உண்மைச் சம்பவங்களை கண்முன் நிறுத்தும் காதல் ஓசை

உண்மையான உறவுக்கும் பாசத்துக்கும் ஏங்கும் நாயகன், ஆனால் அந்த ஏக்கத்தை தங்கள் சுயநலத்துக்காகப் பயன்படுத்தும் சொந்தங்கள்… இதன் நடுவே ஒரு தென்றலாய் வந்து ஆறுதல் தரும் காதலி… இப்படி ஒரு அழுத்தமான கதையை திரையில் பார்த்து எத்தனை நாளாச்சு என ஏங்குபவர்களுக்காகவே வருகிறது காதல் ஓசை திரைப்படம்.

பாவானை ஸ்ரீ கிரியேஷன்ஸ் எனப் புதிய நிறுவனம் சார்பில் கே.பி.இந்திரா கணேசன், சுப்பராயுடு தயாரிக்கும் காதல் ஓசை திரைப்படத்தில் புதுமுகம் ரித்திக் கதாநாயகனாக நடிக்கிறார். அவரது காதலியாக நடிப்பவர் புதுமுகம் ராக்கி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் இந்திரா கணேசன்.

படத்தின் கதை மிகவும் நெகிழ்வூட்டக் கூடியது.

இதுகுறித்து இயக்குநர் கே.பி.இந்திரா கணேசன் இப்படிக் கூறுகிறார்.

இன்னறைய இளைஞர்களுக்குப் பிடித்தமான படமாக காதல் ஓசை இருக்கும். இது எனது முதல் படம். அனைத்து ரசிகர்களும் தங்கள் குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கும் விதத்தில் இப்படத்தை எடுத்திருக்கிறேன். ஒவ்வொரு காட்சியும் உண்மைச் சம்பவங்களை நினைவூட்டும் விதத்தில் இருக்கும். தன்னைச் சுற்றிலும் அன்பும் பாசமும் பொழியும் உறவுகளாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறான் நாயகன். ஆனால் அவர்களோ அவனையும் அவனது உண்மையான பாசத்தையும் தங்கள் சுயநலத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த நிலையில் அவன் வாழ்க்கையில் வருகிறாள் ஒரு அன்புக் காதலி. ஆனால் அவளுடன் சேர விடாமல் தடுக்கப் பார்க்கிறார்கள் சுயநல சொந்தக்காரர்கள். இந்த சிக்கலைத் தகர்த்து காதலியை எப்படி அடைகிறான் நாயகன் என்பதே காதல் ஓசை படத்தின் கதை.

இந்தப் படம் எடுக்கும்போது நடிகர்களும், டெக்னீசியன்களும், படப்பிடிப்பு நடந்த இடத்தில் இருந்த பொதுமக்களும் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது…” என்கிறார்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் பின்னணி இசைச் சேர்ப்பு வேலைகள் நடந்து வருகின்றன.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

இப்படத்துக்காக மணீஷ் இசையில் கவிஞர் விவேகா 5 பாடல்களை எழுதியுள்ளார். அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைக்காட்சிகளை பவர் பாஸ்ட் அமைத்துள்ளார். கலை இயக்கம் சுரேஷ் கலோரி. இணைத் தயாரிப்பு சி.வாசுகி தங்கவேல். தயாரிப்பு நிர்வாகம் பி.கார்த்திக், ஏகாம்பரம்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.