முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
சூப்பர்ஸ்டாரை வரவேற்கத் தயாராகும் பொள்ளாச்சி

தமிழ்நாட்டின் அறிவிக்கப்படாத முதல்வர் என்கிற அளவுக்கு ரஜினியின் செல்வாக்கும் மவுசும் கொடிகட்டிப் பறக்கிறது. இதில் அவரவருக்கு சில கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், இன்றைக்கு தமிழகத்தின் மிகப் புகழ்வாய்ந்த மனிதரென்றால் அது ரஜினிதான்.

ஒரு இடத்துக்கு ரஜினி வருகிறார் என்றால் அடுத்த நாளே அந்த இடம் தலைநகர அந்தஸ்து பெற்றுவிடுகிறது. அதனால்தான் ரஜினியின் அனைத்து விசிட்டுகளும் படுரகசியமாக வைக்கப்படுகின்றன. சென்னைக்கு அருகில் அதிகம் அறியப்படமாலிருந்த புவனகிரி எனும் சின்ன கிராமம் இன்று உலக ஆன்மீக வரைபடத்தில் முக்கிய தலமாக மாறிவிட்டது, ரஜினியின் இரு விசிட்டுகளுக்குப் பிறகுதான்.

இப்போது சூப்பர்ஸ்டாரின் அடுத்த பயணம் பொள்ளாச்சியை நோக்கி. அங்கே அவர் கோயில் எதையும் எழுப்பப் போவதில்லை. தனது அடுத்த படமான குசேலனின் முக்கியக் காட்சிகளை படமாக்க வருகிறார்.

ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி தொடர்ந்து 15 நாட்கள் ரஜினியும் அவரது குழுவிரும் இங்குதான் தங்கப் போகிறார்கள். இதற்காக பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள வேட்டைக்காரன் புதூர், கிணத்துக்கடவு, புரவிபாளையம், ஆனைமலை பகுதிகளில் பொருத்தமான இடங்களைத் தேர்வு செய்துள்ளார் வாசு. ரஜினி தங்க ஒரு தனி வீட்டையும் ஏற்பாடு செய்துள்ளாராம்.

அந்த வீட்டைப் பார்க்க இப்போதே கூட்டம் கூட ஆரம்பித்திருப்பதுதான் ஹைலைட்.

ரஜினி வீடு என்று சொல்லி கட்டணம் வசூலிக்காத குறையாக, பார்வையாளர்களை ஒழுங்குபடுத்துகிறார்களாம் வீட்டுக்குச் சொந்தக்காரர்கள்.

இதெப்டி இருக்கு!

-சாம்






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.