
குசேலன் படத்தில் பசுபதிக்கு ஜோடியாக நடிக்க குண்டக்க மண்டக்க சம்பளம் கேட்டதால்தான் சிம்ரனை படத்தில் சேர்க்கவில்லை என்று இயக்குநர் பி.வாசு கூறியுள்ளார்.
ரஜினி நடிக்கும் குசேலன் படத்தில் பசுபதிக்கு ஜோடியாக நடிக்க முதலில் சிம்ரனைத்தான் அணுகினர். ஆனால் பின்னர் அவரை விட்டு விட்டு மீனாவை புக் செய்து விட்டனர்.
சிம்ரன் நீக்கம் குறித்து பலவிதமான தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இதுகுறித்து பி.வாசு அளித்துள்ள ஒரு பேட்டியில், சிம்ரனை போடாதது ஏன் என்பதை விளக்கியுள்ளார்.
வாசு கூறுகையில், சிம்ரனின் நடிப்புத் திறமை மற்றும் நடனத் திறமை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் சந்திரமுகியில் அவரை எப்படியாவது சேர்த்து விட வேண்டும் என்று கடுமையாக முயற்சித்தேன்.
ஆனால் அப்போது அவர் கர்ப்பமாகி விட்டதால் அந்த ரோலில் நடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் குசேலனில் சிம்ரனை நடிக்க வைக்க தீர்மானித்து அவரை அணுகியபோது, மிகப் பெரிய தொகையை சம்பளமாக கேட்டு எங்களை அதிர வைத்து விட்டார். அது மிகப் பெரிய தொகை, கற்பனைக்கும் எட்டாத தொகை. அதை கொடுப்பது இயலாத காரியம்.
இதன் காரணமாகவே சிம்ரனை குசேலனில் சேர்க்க முடியாமல் போய் விட்டது. இதையடுத்தே, மலையாள ஒரிஜினலில் நடித்த மீனாவை இப்படத்திற்கும் புக் செய்ய வேண்டியதாயிற்று.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீனாவைப் பரிந்துரைத்தார். இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக, நயனதாரா நடிக்கிறார். நயனதாராவின் கால்ஷீட்களை வீணடிக்காமல் சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு எங்களை அறிவுறுத்தியுள்ளார் ரஜினி. சின்ன ரோலில்தான் நடிக்கிறார் என்றாலும் கூட அவர் கமர்ஷியல் வேல்யூ உள்ள நடிகை. எனவே அவரது கால்ஷீட்டை வீணாக்கி விடக் கூடாது என்று கூறியுள்ளார் ரஜினி.
எனவேதான் சந்திரமுகியில் வருவது போல இப்படத்திலும் நயனதாராவின் கேரக்டரை முழு நீள ஹீரோயினாக மாற்றியுள்ளேன் என்றார் வாசு.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply