முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
அங்காடித் தெருவிலிருந்து தூக்கப்பட்ட ஜெயமோகன்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரைப் பற்றி தரக் குறைவாக எழுதியமைக்காக மன்னிப்புக் கேட்க மறுத்த எழுத்தாளர் ஜெயமோகன், வசந்தபாலன் இயக்கும் அங்காடித் தெரு படத்திலிருந்து தூக்கப்பட்டார்.

இன்று ஐங்கரன் நிறுவனம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தொப்பி, திலகம் எனும் பெயரில், எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி பற்றி மோசமாக இருகட்டுரைகளை தனது பிளாக்கில் எழுதியிருந்தார் ஜெயமோகன். இதனை ஆனந்தவிகடன் பத்திரிகை மறுபதிப்பு செய்ய தமிழ் திரையுலகம் மற்றும் இருபெரும் சாதனையாளர்களின் ரசிகர்கள் கொதித்தெழுந்துவிட்டனர்.

ஜெயமோகன் மற்றும் விகடனின் இச்சயலுக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. இவர்கள் சம்பந்தப்பட்ட படங்களுக்கு இனி எந்த ஒத்துழைப்பும் கிடையாது எனவும் அறிவித்தது. தற்போது படத்தயாரிப்பில் இறங்கியுள்ள விகடன் நிறுவனம் உடனடியாக மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டது. அதன் நிர்வாக இயக்குநர் தனிப்பட்ட முறையில் நடிகர் சங்கத்துக்கு வந்தும் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

ஆனால் கட்டுரையை எழுதிய ஜெயமோகன் மன்னிப்புக் கேட்கவில்லை. மாறாக தனது பிளாக்கில் இருந்த அந்தக் கட்டுரைகளை மட்டும் தூக்கிவிட்டார். மன்னிப்புக் கேட்கும் விஷயத்தில் அவர் பிடிவாதமாக மறுக்கவே, அவரை தங்களின் அங்காடித் தெரு படத்திலிருந்து தூக்கிவிட்டது ஐங்கரன் நிறுவனம்.

பாலாவின் நான் கடவுள் படத்துக்கு அவர் ஏற்கெனவே வசனம் எழுதிவிட்டதால், படத்தை வெளியிடும்போது, அவர் பெயரை நீக்கிவிடுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சீனிவாசன் உறுதியளித்துள்ளாராம்.

-எஸ்.எஸ்






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.