
‘என்னுடைய பையன் படத்தை பார்க்க வர்ற நெனப்போட வந்தேன். இப்ப உங்க பையன் படத்தைப் பார்த்த திருப்தியோட போறேன்…’ -சக்கரகட்டி படத்தின் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் தாணுவிடம் இயக்குநர் பாக்யராஜ் சொன்ன வார்த்தைகள் இவை.
பாக்யராஜின் மகன் சாந்தனு முதல் முறையாக நாயகனாக நடிக்கும் படம் சக்கரகட்டி. இந்தப் படத்தை இயக்கி வருபவர் படத்தின் தயாரிப்பாளர் தாணுவின் மகன் கலாபிரபு. பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டு வரும் இப்படம் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. விரைவில் பாடல்கள் வெளியாக உள்ளன.
இப்படத்தின் முதல் காட்சியை இயக்குநர் பாக்யராஜுக்கு போட்டுக் காட்டினாராம் தயாரிப்பாளர் தாணு. படம் பார்த்து முடித்த பாக்யராஜ், படத்தின் இயக்குநரான கலாபிரபுவை வெகுவாகப் பாராட்டினாராம்.
“இந்தப் படத்தை பார்க்க வரும் முன் என் மகன் கதாநாயகனாக நடிச்ச படத்தைப் பார்க்க போறோம் என்ற நினைப்போட வந்தேன். ஆனா படத்தைப் பார்த்த பிறகு உங்க பையனோட படத்தைப் பார்த்த திருப்தியோட போறேன். அவ்வளவு சிறப்பா பண்ணியிருக்காரு உங்க மகன் கலாபிரபு இந்தப் படத்தை. வாழ்த்துக்கள்…” என்று வாய்விட்டுப் பாராட்டினாராம் பாக்யராஜ்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, தாணுவின் தயாரிப்பு என பிரமாண்டங்களுக்குப் பஞ்சமில்லாத சக்கரகட்டி கோடை விருந்தாக திரைக்க வரவுள்ளது.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply