
“ரஜினி எனக்கு வழிகாட்டி, ஆசான், நண்பர்…” என்றார் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, `குசேலுடு’ படத்தின் தொடக்க விழாவில்!
ரஜினி தமிழில் நடிக்கும் குசேலன் படம், குசேலுடு என்ற பெயரில் தெலுங்கிலும் தயாராகிறது. அஸ்வினி தத்தின் வைஜெயந்தி மூவிஸ் – செவன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்படத்தின் தொடக்க விழாவில் ரஜினியின் நண்பர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், உடன் நடிக்கும் ஜெகபதிபாபு, அரசியல் நண்பர்களான ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் தாசரி நாராயணராவ், டி. ராமாநாயுடு மற்றும் மோகன்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிரஞ்சீவி கிளாப் அடிக்க, சந்திரபாபு நாயுடு கேமராவை இயக்கி படத்தைத் தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய சந்திரபாபு நாயுடு, ‘ரஜினியுடன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கலாம். அவருக்குப் போட்டி அவரேதான். அவர் ஒரு மாமனிதர். வெளிநாடுகளில் அவரது புகழைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும். ஜப்பானில் கூட அவர்தான் சூப்பர்ஸ்டார். நமது இந்திய சினிமாவின் புகழை உலகமெல்லாம் கொண்டு சென்ற பெருமை ரஜினியையே சாரும்…’ என்று புகழ்ந்தார். . ரஜினிக்கு சமுதாயத்திற்காக பாடுபடும் எண்ணம் இருப்பதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
தனது மகளின் காதல் திருமணத்தின் போது மன நெருக்கடிகளுக்கு ஆனானதையும், அந்த நேரம் ரஜினியுடன் ஒரு நாள் முழுவதையும் தன்னுடனிருந்து மன தைரியம் அளித்ததையும் சிரஞ்சீவி நினைவு கூர்ந்தார். “அன்றைய தினம் ரஜினிக்குள் ஒரு ஞானி இருப்பதை கண்டு கொண்டேன். அவரிடமிருந்து நான் நிறையவே கற்றுக் கொண்டேன்…” என்றார் ஆச்சரியத்துடன்.
ரஜினி தெலுங்கில் நடித்த முதல் படத்தை அப்போதைய ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ் கிளாப் அடிக்க, நாகேஸ்வர ராவ் தொடங்கி வைத்தார். தனது பேச்சில் இதனை குறிப்பிட்ட ரஜினி, அதேபோல் இந்தப் படத்தையும் சிரஞ்சீவியும் ‘சின்னபாபு’ சந்திரபாபு நாயுடுவும் சேர்ந்து தொடக்கி வைத்திருக்கிறார்கள். இதுவும் பெரிய வெற்றியை பெறும் என்றார்.
தனது திரையுலக வாழ்க்கை இப்போதுதான் பூர்த்தியடைந்த்து என்று தனது நன்றியுரையில் குறிப்பிட்டார் ஜெகபதிபாபு.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply