முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
‘பரபர’ விற்பனையில் குருவி!

கேரளாவைத் தொடர்ந்து குருவி படத்தின் கர்நாடக விநியோக உரிமையும் நல்ல விலைக்குப் போயுள்ளது. ரூ. 1.20 கோடிக்கு மாண்டியா ஸ்ரீகாந்த் இதனை வாங்கியுள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்க, இயக்குனர் தரணி இயக்கிவரும் குருவி திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார்.

இந்த படத்தின் விநியோக உரிமைகள் விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநில விநியோக உரிமை ரூ.1.50 கோடிக்கு விற்கப்பட்டது.

விஜய்யின் முந்தைய படமான ‘அழகிய தமிழ் மகன்’ கர்நாடக மாநில உரிமை 75 லட்சத்துக்கு விலைபோனது. அதைக் காட்டிலும் கூடுதலாக குருவி விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி படத்திற்குப் பிறகு தமிழகத்தைத் தாண்டி அண்டை மாநிலங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ள படம் குருவிதானாம்.

இதுபற்றி குருவி படத் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், பக்கத்து மாநில விநியோக உரிமைகள் சிவாஜி படத்துக்கு அடுத்தபடியாக, குருவி படத்துக்கு அதிக விலையில் விற்கப்படுகிறது. மே மாதம் முதல் வாரத்தில் இந்த படம் திரைக்கு வரும் என்றார்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.