
இரட்டை குழந்தைக்குத் தாயாகப் போகும் நடிகை ஏஞ்சலினா ஜூலிக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென கூடிவிட்டதால் அவரது மருத்துவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஜூலி - பிராட் பிட் நட்சத்திர ஜோடி விரைவிலேயே இரட்டைக் குழந்தைக்குப் பெற்றோராகப் போகின்றனர். பிரசவ காலம் நெருங்குவதால் தற்போது ஜூலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் செய்த போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வழக்கத்தைவிட பல மடங்கு அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்படுள்ளது.
பொதுவாக பிரசவ காலத்தில் இப்படி சர்க்கரை அளவு கூடுவது வழக்கம்தான் என்றாலும், ஜூலி விஷயத்தில் இது கவலை தரும் அளவுக்கு உள்ளதாம். ஏற்கெனவே அவருக்கு டயாபடீஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உடற்பயிற்சிகள் மற்றும் டயட் மூலம் இதைக் குறைக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படியும் குறையாவிட்டால், இது பல கடுமையான விளைவுகளை ஏற்படுத்துமாம். ஆனால் உடற்பயிற்சி செய்யும் நிலையில் தான் இப்போது இல்லை என சலிப்புடன் கூறிவிட்டாராம் ஜூலி.
மேலும் அவரது கால்கள் மிகவும் வீங்கி இருப்பதால், வழக்கமாக அணியும் ஷூக்களைவிட மிகப் பெரிய சைஸ் ஷூக்களை அணியத் துவங்கியுள்ளாராம். கூடிவிட்ட எடை, களைப்பு எல்லாமாகச் சேர்ந்து அவரை மிகவும் பலவீனமாக்கி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெக்ஸாஸில் தனது புதுப்பட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த பிராட் பிட், படப்பிடிப்பைக் கேன்சல் செய்துவிட்டு ஏஞ்சலினா ஜூலியின் அருகிலிருந்து கவனித்துக் கொள்கிறாராம்.
-பிரவீண்
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply