
பிரபல பாப் பாடகி ஜெஸிகா சிம்ப்ஸன் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
27 வயதாகும் ஜெஸிகா, சமீபத்தில் ஈராக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ட்ரிப் டு ஈராக் எனும் பெயரில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். அங்கு ஈராக் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுவரும் அமெரிக்கப் படைகளை உற்சாகப்படுத்தும் விதத்தில் ராணுவ முகாம்களில் பாடினார் ஜெஸிகா.
ஒரு புதிய இசை ஆல்பம் வெளியிடும் பணிகளில் தீவிரமாக இருந்த அவருக்கு திடீரென சிறுநீரகங்களில் நோய்த்தொற்று ஏற்பட்டது. உடனடியாக அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் செடார்ஸ் சினாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு இப்போது அவர் நலமாக உள்ளதாக அவரது பிஆர்ஓ அறிவித்துள்ளார்.
-பிரவீண்
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply