முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
மீண்டும் ஜானி டெப்

ஹாலிவுட்: உலகைக் கலக்கிய ஹாலிவுட் படமான பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் நான்காவது பாகத்தைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது டிஸ்னி நிறுவனம்.

ஜானி டெப், ஜெஃப்ரி ரஷ் மற்றும் கெய்ரா நைட்லி நடித்த புகழ்பெற்ற படமான பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் இதுவரை மூன்று பாகங்கள் வெளிந்து சக்கைப் போடு போட்டது. இப்படத்தின் இரண்டாவது பாகமான டெட் மேன்ஸ் செஸ்ட் தமிழில் டப்பாகி வெளியானபோது, அப்போது ரிலீசாகியிருந்த பல தமிழ் திரைப்படங்களை வசூலில் ஓரம் கட்டியது.

அந்தப் படத்தில் ஜாக் ஸ்பாரோவாக நடித்த ஜானி டெப் தன் ஸ்டைலான நடிப்பால், தமிழகத்தில் ரசிகர் மன்றம் அமைக்கும் அளவுக்கு பாப்புலராகிவிட்டார்.

இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் அட் வேர்ல்ட்ஸ் எண்ட் எனும் பெயரில் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதுவும் வெற்றிப் படமே. ஆரம்பத்தில் பைரேட்ஸ் வரிசையின் கடைசிப் படம் இதுதான் என டிஸ்னி நிறுவனம் அறிவித்திருந்த்து. ஆனால் உலகமெங்கும் ரசிகர்கள் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள் இதன் நான்காம் பாகத்தையும் தயாரிக்குமாறு டிஸ்னி நிறுவனத்துக்கு இமெயில் அனுப்பி வருகிறார்களாம்.

இந்த அன்புக் கட்டளைக்காக பைரேட்ஸின் நான்காம் பாகத்தைத் தயாரிக்கும் வேலைகளைத் துவங்குமாறு தனது குழுவினரைக் கேட்டுக் கொண்டுள்ளது டிஸ்னி நிறுவனம். ஜானி டெப்பை நம்பித்தான் படத்தின் வியாபாரமே இருக்கிறது என்பதால் இந்த விஷயத்தை முதலில் அவரிடம் சொல்லி விட்டார்களாம். அவரும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதால் வேகமாக வேலையில் இறங்கிவிட்டார்கள். ஆனால் இந்தப் படம் உடனடியாக வரப் போவதில்லையாம். 2010 அல்லது 2011 ஆண்டுதான் வெளிவரும் என அறிவித்துள்ளது டிஸ்னி நிறுவனம்.

இதற்கிடையில் ஜானி டெப் ஒரு இந்திப் படத்தில் நடிக்கப்போகிறாராரம். அப்படியே சைடில் தமிழுக்கும் வந்துட்டுப் போங்க டெப்பண்ணே!

-ஜாஸ்






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.