முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
தான்சேனாக அபிஷேக் பச்சன்!

தான்சேனாக அபிஷேக் பச்சன்!

இந்தியில் பெரிய அளவில் சரித்திரப் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அபிஷேக் பச்சன் பிரபல இசைமேதை தான்சேனின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஜ்ஸ்ரீ ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சதீஷ் கௌஷிக் இயக்குவதாக உள்ளார்.

“கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் இந்தப் படம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து வருகிறோம். ஆனால் யார் இந்தப் படத்தின் கதாநாயகன் என்பது எனக்கு சரிவரத் தெரியவில்லை. ‘கர்ஜ்’ படத்தின் வெளியீட்டு பணியில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதால் இந்த விவரம் எனக்கு தெரியவில்லை. தயாரிப்பாளருக்கு அபிஷேக்கை போடலாம் என்ற எண்ணம் இருத்திருக்கலாம்” என்றார் இயக்குனர் கௌஷிக்

இசையமைப்பாளர் ரவீந்திர ஜெயின் ஜேசுதாஸ் பாடும் 4 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறாராம். “மற்ற பாடல்கள் கதாநாயகி முடிவான பிறகு போட்டு முடிப்பேன்” என்கிறார். கதாநாயகியாக்கு தீபிகா படுகோனின் பெயரை முன்மொழிந்துள்ளார்களாம்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.