மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தவரும் ரசிகர்களின் நாடித் துடிப்பை நன்கு அறிந்தவர் என்று எல்லோராலும் புகழப்படும் கண்ணன், ‘ஜப் வி மெட்’ எனும் இந்தி படத்தை தமிழில் எடுக்கவிருக்கிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அப்படத்தில் பரத் கதாநாயகனாகவும், தமன்னா கதாநாயகியாகவும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்கள்.
இந்தியில் ‘ஜப் வி மெட்’டை இயக்கிய காமராமேன் நடராஜ்தான், இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவாளர் பணியை மேற்கொள்வார் என நம்பப்படுகிறது.
பேரரசுவின் இயக்கத்தில் ‘திருத்தணி’ படத்தில் பரத் பிசியாக இருப்பதால் அந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் ஜனவரி இறுதியில் ‘ஜப் வி மெட்’ படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரபரப்பாக முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் இளம் கதாநாயக, நாயகிகளைத்தான் இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார், கண்ணன்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply