முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
கதாநாயகனுக்கு பல் உடைந்தது!

கதாநாயகனுக்கு பல் உடைந்தது!

‘புகைப்படம்’ படத்தில் நடித்திருக்கும் புதுமுக ஹீரோ நந்தா, சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். அப்போது அங்கிருந்த கல்லில் அவரது முகம் மோதியதால் முன் வரிசையில் இருந்த 3 பற்கள் உடைந்தது.

படப்பையிலுள்ள பள்ளி வளாகத்தில் நண்பர்களுடன் மோதும் காட்சி அமைப்பை இயக்குனர் ராஜேஷ் லிங்கம் படமாக்கிக் கொண்டிருந்த போதுதான் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், கதாநாயகன் நந்தா.

மாயாபஜார் சினிமாஸ் நிறுவனத்துக்காக என்.சி. மணிகண்டன் தயாரிக்கும் இப்படத்தில் சிவம், நந்தா, ஹரீஷ், அம்சத் கதாநாயகன்களாக நடிக்கின்றனர். பிரியா, மிருணாளினி, யாமினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். அனைவருமே புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.