முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
சித்தார்த்தை வெறுக்கிறார், சோஹா!

சித்தார்த்தை வெறுக்கிறார், சோஹா!

தெலுங்கில் இப்போது கொடி கட்டிப் பறக்கிறார், ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமான சித்தார்த். தனது இயல்பான நடிப்பினால் பல உள்ளங்களைக் கவர்ந்தவர் சித்தார்த்.

‘ரங் தே பசந்தி’ என்ற வெற்றிப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருப்பார், சோஹா அலிகான். அந்தப் படத்தில் சித்தார்த்தும் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பிரபல கிரிக்கெட் வீரர் பட்டௌடி மற்றும் பிரபல நடிகை ஷர்மிளாதாகூரின் மகள்தான் சோஹா அலிகான். சித்தார்த் இவர் மேல் கொண்ட ஆசையால் தன் மனைவியை விட்டு பிரிந்தார். இப்போது இவருடனும் பிணக்கு ஏற்பட்டிருக்கிறதாம். காரணம், ‘சித்தார்த் எப்போதும் ஹைதராபாத்திலேயே இருப்பதாகவும் தன்னுடன் நேரத்தைக் கழிப்பதில்லை’ என்பதுதான் சோஹாவின் வருத்தத்துக்குக் காரணமாம். சமீபத்தில் மும்பை சென்றபோது கூட சோஹாவிடமிருந்து அவருக்கு சரியான வரவேற்பில்லையாம், தொலைபேசியிலும் இருவரும் தொடர்பு கொள்வதில்லையாம்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.