தலைவாசல் விஜய் வாழ்க்கையில் இப்போது சந்தோஷ அலை வீசத் தொடங்கியிருக்கிறது. ‘அபியும் நானும்’ படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்ததில் அவர் முகத்தில் மகிழ்ச்சி களை கட்டியிருக்கிறது. சிறிது காலமாகவே குடிகாரன், ரிக்ஷாக்காரன் போன்ற சின்ன கதாபாத்திரங்களிலேயே நடிக்க சான்ஸ் கிடைத்துக் கொண்டிருந்தது. ஒரு வேளை என்னுடைய உருவ அமைப்பும் அதற்கு பொருத்தமாக அமைந்துவிட்டதோ என்னமோ? என்கிறார், சிரிப்புடன்.
பிரகாஷ்ராஜ் தயாரித்து, ராதா மோகன் இயக்கியிருக்கும் படம் ‘அபியும் நானும்’. இதல் எனக்கு பிரகாஷ்ராஜின் நண்பன் கதாபாத்திரம். ஸ்ரீ ரஞ்சனி என் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் நான் ‘அபியும் நானும்’ படப்பிடிப்பில் இருந்தபோதுதான் என் மகன், நீச்சல் போட்டியில் தேசிய அளவில் முதலாவதாக வந்த விஷயம் தெரிய வந்தது. இது மிகவும் பெருமையளித்த விஷயம் என்கிறார், தலைவாசல் விஜய்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply