“சிறந்த திரைப்பட விமர்சகர் விருதை 25 ஆண்டுகளுக்கு முன்பு அளிக்க ஆரம்பித்திருந்தால், நானும் விமர்சகர் விருதினை வாங்கியிருப்பேன்” என்றார், திரைப்பட இயக்குநர் பாலசந்தர். திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தமிழில் முதன் முறையாக 2007-ம் ஆண்டுக்கான திரைப்பட விமர்சகர் விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது.
இதில் சிறந்த படமாக பருத்திவீரன் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இயக்குநராக அமீர், சிறந்த திரைக் கதாசிரியர் வெங்கட் பிரபு (சென்னை - 28) சிறந்த இசையமைப்பாளர் (யுவன் சங்கர் ராஜா) சிறந்த கதாசிரியர் ராம் (கற்றது தமிழ்) சிறந்த வசன கர்த்தா விஜி (மொழி) சிறந்த ஒளிப்பதிவாளர் சுதிர் (கற்றது தமிழ்) சிறந்த பாடலாசிரியர் முத்துக்குமார் ஆகியோருக்கு திரைப்பட இயக்குநர் பாலசந்தர் விருதுகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், “25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விருதை கொடுக்க ஆரம்பித்திருந்தால், நானும் விமர்சகர் விருதினை வாங்கியிருப்பேன். நான் அறிமுகப்படுத்தி ரஜினி, கமல் போன்றோர் தமது திறமையினால் உயர்ந்துள்ளனர். ‘அரங்கேற்றம்’ படம் எடுத்த போது எனக்கு துணிச்சல் இருந்தது. இப்போது அந்த மாதிரி படம் எடுக்க பயமாக உள்ளது.
‘பருத்தி வீரன்’ படத்தில் பிரியாமணி நடித்த க்ளைமாக்ஸ் காட்சி கண்டு அழுதேன். அமீர், அப்படத்தில் சிறப்பான முடிவை அளித்திருந்தார். துணிச்சலுடன் எடுக்க வேண்டும். யதார்த்தமான கதைகளை வெகுஜன மக்கள் விரும்பும்படி இயக்க வேண்டும்” என்றார்.
அமீர் பேசுகையில், “சிறந்த படம் என்பதை சரியாகத் தேர்வு செய்யாமல், பிரபலமாக இருக்கிறார் என்பதற்காக நடிகர் ரஜினி, விஜய்க்கு விருதுகள் வழங்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். நான், ரஜினி, விஜய்க்கு விருது வழங்கக் கூடாது என்று சொல்லவில்லை மாறாக சிறப்பாக நடித்தவர்களுக்கு விருது கிடைக்காமல் போகும் அவல நிலை ஏற்படுவதுதான் வருத்தமாக உள்ளது” என்றார்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply