முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
இந்தியில் வருகிறது ‘சில்க் ஸ்மிதா’ கதை.

இந்தியில் வருகிறது ‘சில்க் ஸ்மிதா’ கதை.

சில்க் ஸ்மிதாவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இவர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்ததும் கலையுலகமே ஸ்தம்பித்தது. ஏனெனில் இவர் கவர்ச்சி நடிகை மட்டுமல்ல, குணச்சித்திர நடிகையும் கூட என்பதை தனது நடிப்பாற்றலால் நிரூபித்தவர். ‘அலைகள் ஓய்வதில்லை’யில் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த அண்ணி கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்திருப்பார்.

இந்த நடிகையின் கதையை இந்தியில் எடுக்க இருக்கிறார்களாம். சில்க் ஸ்மிதாவின் வேடத்தில் நடிக்க இருக்கிறார், மல்லிகா ஷெராவாத்.

‘மூன்றாம் பிறை’ இந்தியில் படமாக்கப்பட்டதிலிருந்தே ‘சில்க்’ அங்கு பிரபலமாம். இப்படத்தைத் தயாரிக்க இருக்கும் ஏக்தா கபூர், “இப்போதைக்கு இந்தப் படத்தைப் பற்றி எதுவும் செல்ல முடியாது. படம் குறித்த முதல் கட்ட ஆலோசனை மட்டுமே நடந்துள்ளது” என்கிறார்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.