நடிகர் முரளியின் மகனான அதர்வா என்ஜினீயரிங் 2ம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். நடிப்பதற்கு வந்த வாய்ப்பை வேண்டாம் என்ற சொல்லாமல் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
‘ஆனந்தம் ஆரம்பம்’ என்ற தனது முதல் படத்திற்காக பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். இப் படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதி நடிக்கிறார்.
விஷ்ணு சங்கரன் இயக்கவிருக்கும் இப்படத்தின் தொடக்க விழா சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது.
பிரமிட் சாய்மீரா நிறுவனம் வழங்க ராஜ்பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ராமநாதன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
அதர்வா நடித்த முதல் காட்சியை, பாரதிராஜா இயக்கினார், இயக்குநரும் தாத்தாவுமான சித்தலிங்கையா காமிராவை ஆன் செய்தார்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராமநாராயணன், கே. பாக்யராஜ், சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார், கலைப்புலி தாணு, மனோரமா மற்றும் பலர் விழாவில் பங்கேற்று அதர்வாவை ஆசீர்வதித்தனர்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply