கிடுகிடுவென நிறைய மர்ம படங்கள் வருகின்றன. எதனால் இப்படி? சிறிய பட்ஜெட்டிலேயே கதையை முடித்துவிடலாம் என்பதாலா? தெரியவில்லை. ‘ஆறுபடை’, ‘சற்று முன் கிடைத்த தகவல்’, ‘பிரம்ம தேவா’, ‘மேகம்’, ‘திரு.மனசு’ என்று ‘திடுக்’ படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. லோகேஷனுக்கு, ஒரு காடு, பாழடைஞ்ச பங்களா போதும் என்பதால் இப்படி முடிவெடுக்கிறார்களா? ஒண்ணுமே புரியல, மர்மமா இருக்கு.
திடுக் வரிசையில் இப்போது வரவிருக்கிறது ‘மந்த்ரா’ படம்.
சார்மி, சிவாஜி நடித்திருக்கும் இப்படத்தை இயக்குகிறார் ஓஷோ துளசிராம்.
‘மந்த்ரா’ என்பது ஒரு மர்ம மாளிகையின் பெயர். இதில் வசிக்கிறார் சார்மி. இந்த பங்களாவில் பேய் உலவுவதாக வதந்தியைக் கிளப்பி அந்த பங்களாவை அடைய நினைக்கிறது ஒரு கும்பல். அந்த பங்களாவில் மூன்று பேர் கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளி யார் என்பதை படு சஸ்பென்ஸாக சொல்லும் கதைதான் மந்த்ரா.
தனியாக உட்கார்ந்து பார்த்தா, பரிசு ஏதாவது தருவாங்களா?
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply