முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
நீ நடிக்காவிட்டால் டூப்பை வைத்து படமாக்குவேன்!

நீ நடிக்காவிட்டால் டூப்பை வைத்து படமாக்குவேன்!

‘வேள்வி’ படத்தின் மூலம் கதாநாயகி அந்தஸ்து பெறுகிறார், ஹாசினி. “எனது பெயர் மேக்னா. சினிமாவுக்கென்று இந்தப் பெயரை மாற்றிக் கொண்டேன். ஊர் ஆந்திராவாக இருந்தாலும் சின்ன வயதிலிருந்தே சென்னையில் வசிப்பதால் தமிழ் நன்றாக பேசுவேன். இப் படத்தில் கொஞ்சம் கவர்ச்சியாகவே நடிக்கச் சொன்னார்கள். இந்த காட்சிகள் தேவைதானா, அவசியமா இப்படி நடிக்கணுமா என்று இயக்குனரிடம் கேட்டதற்கு அவர், “நீ நடிக்கவில்லையென்றால் டூப்பை வைத்து படமாக்குவேன்” என்று உடனடியாக பதில் கூறிவிட்டார். சிறிது நேரம் யோசித்தேன். டூப்பை வைத்து நடிக்க வைத்தால் இன்னும் கூடுதல் கவர்ச்சியாக நடிக்க வைப்பார்கள். ரசிகர்களுக்கு நானா, டூப்பா என்று தெரியாது அதனால்தான் நானே நடிக்க வேண்டியதாயிற்று” என்கிறார், ஹாசினி.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.