அப்பா, மகன், என 2 வேடங்களில் கலக்கவிருக்கிறார், கேப்டன். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் தயாராகும் படம் ‘மரியாதை’. இந்தப் படத்தில் தந்தை மகன் என்ற 2 வேடம் விஜய்காந்துக்கு. கதாநாயகியாக நடிக்கிறார், மீரா ஜாஸ்மின். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார், விக்ரமன். விக்ரமன், விஜய்காந்த் வெற்றி கூட்டணிதான். இவர் இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த ‘வானத்தைப்போல’ படம் வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்!
விஜய் ஆண்டனி இசையமைக்கும் இப்படத்தில் அம்பிகா, சண்முகராஜன், ரமேஷ்கண்ணா சம்பத் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் மீனாவும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply