முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
‘மேதை’யில் ராமராஜன்!

‘மேதை’யில் ராமராஜன்!

கலைமகள் கலைக் கூடம் சார்பில் எம்.குமார், டி.பழனிச்செட்டியார், பாலகிருஷ்லெடி, ‘சீர்காழி’ கே.சிவசங்கர், எஸ்.செல்வபிரகாஷ் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘மேதை’.

இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயனாக நடிக்கிறார், ராமராஜன். இது அவருக்கு 44வது படம். இந்தப் படத்தில் கிராமத்து பள்ளி ஆசிரியர் வேடம். கிராமிய பின்னணியைக் கொண்ட இப்படத்தில் காதல், நகைச்சுவை, சண்டை என்று எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களும் இருக்கிறதாம்.
புதுமுக நாயகி ராமராஜனுடன் ஜோடி சேருகிறார். சார்லி, வடிவேல், அஜய், ஹாசினி, ஸ்ரீரஞ்சினி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்துக்கு இசையமைக்கிறார், தீனா.

மேலூரில் படப்பிடிப்பு தொடங்கி சென்னை கடலூர், புதுச்சேரி, நெய்வேலி மற்றும் பல இடங்களில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார், என்.டி.ஜி.சரவணன்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.