நடிகர் ரஜினிகாந்த் நடித்து பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த படம் ‘குசேலன்’. ஏனோ தெரியவில்லை படம் வெளிவந்த நாள் முதல் பல தரப்பட்ட பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
புதுப்பிரச்சினையாக நேற்று, ‘குசேலன்’ படத்தில் தங்களை கேவலமாக சித்தரித்திருக்கிறார்கள் என்றும், முடிதிருத்தும் தொழிலை கேவலமாக பேசுவதைப் போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர், எம்.ஜ.பாக்கியநாதன் கூறியிருக்கிறார்..
இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்திருக்கிறது. அதனால் சம்பந்தப்பட்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். இதைத் தொடர்ந்து இயக்குனர் பி.வாசு வீட்டை முற்றுகை இடச் சென்ற 150 சவரத் தொழிலாளர்களை கைது செய்தனர், போலீசார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பி.வாசு, ‘முடிதிருத்தும் தொழிலாளிகளை மிகவும் உயர்வாக இப்படத்தில் காட்டியுள்ளேன். படத்தின் ஆரம்பமே ஒரு கத்திரிக்கோல் நட்சத்திரத்தை உருவாக்குவது போல் காட்டப்பட்டுள்ளது. இதை விட ஒரு அந்தஸ்தை வேறு யாரால் கொடுக்க முடியும். சுயகௌரவத்தை விட்டுக் கொடுக்காத ஒரு கதாபாத்திரம் பசுபதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. போலி டாக்டர், போலி சாமியார் போல்தான் வடிவேலு கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டது. எந்த ஒரு காட்சியும் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் வைக்கப்படவில்லை என்றார், மனவருத்தத்துடன்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply