முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
என் கதாபாத்திரத்தில் மட்டுமே என் கவனம் இருக்கும் - ஷெரில் பிரின்டோ.

என் கதாபாத்திரத்தில் மட்டுமே என் கவனம் இருக்கும் - ஷெரில் பிரின்டோ.

ஸ்க்ரீன்ப்ளே எண்டர்டெயின்மென்ட் கம்பெனி தயாரிக்கும் படம் ‘வாடா’. இப்
படத்தில் கதாநாயகியாக ஷெரில் பிரின்டோ நடிக்கிறார்.

சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார். இதில் அவருக்கு டூரிஸ்ட் கார்
டிரைவர் வேடம். தொடர்ந்து ஹிட் கொடுத்துக் கொண்டு வரும் இவருக்கு இந்த
படமும் நல்ல பெயரைக் கொடுக்கும்.

நிறைய நடிகைகள் மூத்த நடிகர்களுடன் நடிப்பதை விரும்புவதில்லை, நீங்கள்
எப்படி என்று ஷெரிலிடம் கேட்டதற்கு ‘எனக்கு அப்படி எந்த எண்ணமும்
கிடையாது. நான் என் கதாபாத்திரம் எப்படி இருக்கிறது என்றுதான்
பார்ப்பேன். என் முதல் படமே விஜய்காந்த் சாருடன்தானே! அதோடு இப்பொழுது
நான் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் கதாநாயகனான சுந்தர் சி. யும்
தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்துக் கொண்டிருப்பவர்தான். இப்பொழுது
முன்னணியில் இருக்கும் நடிகைகள் கூட மூத்த நடிகர்களுடன் நடிக்கிறார்களே.
நான் முன்பே சொன்னதுபோல எனக்கு முக்கியம், என்னுடைய கதாபாத்திரம்தான்.
வேறு எதைப் பற்றியும் நான் கவலைப்பட மாட்டேன் என்கிறார், சிரித்தபடி.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.