முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
‘ராமன் தேடிய சீதை’ படத்திற்கான சம்பளம் தரப்படவில்லை - பரபரப்பு புகார்

‘ராமன் தேடிய சீதை’ படத்திற்கான சம்பளம் தரப்படவில்லை - பரபரப்பு புகார்

சென்னை : மோசர்பேயர் நிறுவனம் ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் நடித்ததற்கு தனக்குச் சம்பளமே தரவில்லை என்று புகார் கூறியுள்ளார், நவ்யா நாயர்.

இது குறித்து நவ்யா நாயர் பேசுகையில், “மோசர் பேயர் நிறுவனம் ‘அவள் யெர் தமிழரசி’ படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தது. ஆகவே இந்நிறுவனம் தயாரித்த ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் நான் சம்பளமே இல்லாது கவுரவ வேடத்தில் நடித்துக் கொடுத்தேன்”.

இந்நிலையில் அவர்கள் நான் ‘அவள் பெயர் தமிழரசி’ படத்துக்கு அளித்த கால்ஷீட்டை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. விளைவு, நான் அப்படத்திலிருந்து விலகிக் கொண்டேன்.  நியாயப்படி பார்த்தால் ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் நடித்ததற்கு அவர்களாகவே எனக்கு எனக்கு சம்பளம் தந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தரவில்லை. 

அண்மையில் நடந்த ‘ராமன் தேடிய சீதை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு நான் வரவில்லை. காரணம், எனக்கு அப்படத்தில் சிறிய வேடமே தவிர வேறொன்றும் இல்லை என்று கூறினார்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.