முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
கரண் கலக்கலாக நடிக்க உள்ள ‘அலி’ கதாபாத்திரம்!

கரண் கலக்கலாக நடிக்க உள்ள ‘அலி’ கதாபாத்திரம்!

சென்னை : அர்த்தனாரி என்ற பெயரில் வெளிவர இருக்கும் படத்தில் கரண் ‘அலியாக’ வந்து அசத்தப் போகிறார்.

இது குறித்து கரண் பேசுகையில், “கொக்கி’, ‘கருப்பசாமி’, ‘தீ நகர்’, ‘காத்தவராயன்’ என்று வெளிவந்த அனைத்து படங்களிலும் நான் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்தேன்.

இப்போது இயக்குநர் நந்தா பெரியசாமி ‘அர்த்தனாரி’ படத்தின் கதையைச் சொன்னதுமே எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அதோடு அரவாணி வேடத்தில் நடிப்பது என்பது ஒரு சவாலான விஷயம். ஒரு காலத்தில் அரவாணிகளை கேலிப் பொருளாகப் பார்த்தனர். ஆனால் இப்போது அவர்களுக்கும் சில சலுகைகள் கிடைக்கிறது. அவர்களைப் பெருமைப்படுத்தும் முயற்சியில், இப்போது சினிமா இறங்கியுள்ளது. அதில் ‘அர்த்தனாரி’ படமும் ஒன்று” என்றார்.

கரண் என்றாலே கலவையான கதாபாத்திரங்களில் வந்து அசத்துபவர் தானோ!






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.