ஹாலிவுட் நடிகர் பல கோடி கொடுத்து வாங்கிய கதையின் உரிமை!
ஹாலிவுட்டில் ஒசாமா பின்லேடன் கதை திரைப்படமாக உள்ளது. இதன் உரிமையை
ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குலூனே வாங்கியுள்ளார்.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தை தகர்த்து அமெரிக்கா மட்டுல்லாது உலகையே
அதிர்ச்சி அடைய வைத்த தீவிரவாதி, பின்லேடன்.
இவரை அமெரிக்க ராணுவம் தேடி வருகின்றது.
இந்நிலையில் கடந்த 2001-ம் ஆண்டு ஒசாமாவின் கார் ஓட்டுநரான சலீம் ஹாம்டன்
ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
“இவனுக்கு தீவிரவாத அமைப்பின் எல்லாத் திட்டமும் அத்துபடி” என்ற குற்றம்
சாட்டியது, அமெரிக்கா.
ஆனால் சலீமீன் வழக்கறிஞரோ, “சலீம் வெறும் கார் ஓட்டுநர்தான்” என்று வாதாடினார்.
இருப்பினும் அமெரிக்கா ராணுவ நீதிமன்றம், “சலீமுக்கு தீவிரவாத
செயல்களுடன் தொடர்பு இருந்தது” என்று தீர்ப்பளித்தது.
உலகையே பரபரப்பாக்கிய இச் சம்பவத்தை ஜோனாதன் மஹலெர் என்ற பத்திரிகையாளர்
‘தி சேலஞ்ச்’ என்ற புத்தகமாக எழுதினார்.
இதன் உரிமையைத்தான் நடிகர் ஜார்ஜ் குலூனே பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.
அதோடு இப்படத்தில் ஜார்ஜ் அமெரிக்க கப்பல் படையின் கமாண்டராகவும் நடிக்க உள்ளார்.
திரைப்படத்துக்கான கதை தேடுவதில் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் எல்லாம்
ஒரே ரகம்தான்!
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply