சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கும் அதிகாரம் எனக்கில்லை ஷாருக்கான் விளக்கம்!
பாலிவுட்டின் மூத்த நடிகரான மனோஜ் குமார், முன்னணி நடிகர் ஷாருக்கான் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்து சூப்பர் ஹிட்டான ‘ஓம் சாந்தி ஓம்’ படம் அண்மையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
“தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போது என் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான காட்சிகளை நீக்க வேண்டும்” என்று ஷாருக்குக்குக் முன் கூட்டியே கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் தொலைக்காட்சில் ஒளிபரப்பட்ட படத்தில் மனோஜ் குறிப்பிட்ட காட்சிகள் எதுவுமே நீக்கப்படவில்லையாம்.
ஆகவே ஆத்திரமடைந்த மனோஜ் குமார் மும்பை அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஷாருக்கானுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து மனோஜ் பேசுகையில், “என் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில் காட்சிகள் இருந்ததால், ஷாருக்கான் அவரது மனைவி கவுரி மற்றும் இயக்குநர் எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.
ஆனால் ஷாருக்கானோ ‘சர்ச்சைக்குரியவை என்று கூறப்படும் அந்த காட்சிகளை படத்திலிருந்து நீக்கும் அதிகாரம் தனக்கு இல்லை’ என்று கூறியுள்ளார்.
ஷாருக்கானுக்கு நேரம் சரியில்லை போல!
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply