பார்க்க கவர்ச்சிப் புயலாய் இருந்தாலும், பலரும் மல்லிகாவை யாருக்கும் அடங்காத திமிர் பிடித்தவர் என்றுதான் கூறுகிறார்கள்.
இதை உறுதிப்படுத்தும் சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்த்து.
மல்லிகா ஷெராவத், ராஹல் போஸ், பரேஷ் ராவல் நடித்துள்ள படம் ‘ மான்கயே முகல் ஏ ஆஸம்‘.
இப் படம் தொடர்பான நேருக்குநேர் நிகழ்ச்சிக்கு, மும்பையிலுள்ள ஒரு தனியார் டி.வி. சேனலின் ஸ்டூடியோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு குர்தா, பைஜாமா அணிந்து வந்திருந்தார், பரேஷ் ராவல்.
அப்போது அங்கு வந்த மல்லிகா ஷெராவத் பரேஷ் ராவலை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் காதில் ஏதோ கிசுகிசுத்து விட்டு விறுவிறுவென தன் காருக்குப் போய்விட்டாராம்.
பரேஷிடம் தயங்கியபடி வந்த அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், உங்க உடை மல்லிகாவுக்கு பிடிக்கல, நீங்க கோட் சூட் போட்டால்தான் அவர் பேட்டி தருவாராம். அவரோட பேட்டி ரொம்ப முக்கியம். ப்ளீஸ் சார், நாங்களே கோட் சூட் தரோம். நீங்க அத போட்டுக்கிட்டா போதும், என்று சொல்லி முடிப்பதற்கு முன் வெடித்து விட்டாராம் பரேஷ்.
நான் எந்த உடை போட்டா இவங்களுக்கு என்ன… நான் வரவில்லை, என்று கத்தியபடி அரங்கத்தை விட்டு வெளியே வந்து விட்ட பரேஷின் காலில் விழாத குறையாக சமாதானப்படுத்தி கோட் சூட் போட சம்மதிக்க வைத்தார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.
பிறகுதான் அரங்கத்துக்குள்ளேயே வந்தாராம், மல்லிகா!
இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் மல்லிகா. உங்க உடை விஷயத்துல யாராவது தலையிடறோமா? எவ்வளவு ஃப்ரீயா இருக்கீங்க?, என தனியாகக் கேட்டிருப்பாரோ பரேஷ்!
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply