முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
அமீர்கானுக்கு தலை வணங்குகிறேன் - பாலச்சந்தர் புகழாரம்

அமீர்கானுக்கு தலை வணங்குகிறேன் - பாலச்சந்தர் புகழாரம்

உணர்ச்சிக் கொந்தளிப்பில் அமீர்கான் கண்ணீர்!

சென்னை: கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது ‘தாரே ஜமீன் பர்’ படத்தை இயக்கிய அமீர்கானுக்கு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதியும் சிறப்பான ஒரு விழாவை ஏற்பாடு செய்து அதில் சமூக சீர்திருத்தக் கதைகளை தன் திரைப்படத்தில் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கும் புதுமுக இயக்குநருக்கு கொல்லாபுடி ஸ்ரீனிவாஸ் நினைவு அறக்கட்டளை சார்பில் ‘கொல்லாபுடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது’ வழங்கப்படுகிறது.

2007ம் வருடத்திற்கான புதுமுக இயக்குநருக்கான விருது ‘தாரே ஜமீன் பர்’ என்ற இந்திப் படத்தை இயக்கிய அமீர் கானுக்கு வழங்கப்பட்டது. விருதுடன் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கான காசோலையும் பரிசாக அளிக்கப்பட்டது. இத்தொகையை தரமணியில் இருக்கும் எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரிக்கு வழங்குவதாகத் தெரிவித்தார், அமீர்கான்.

இயக்குநர் கே. பாலச்சந்தரும், விது வினோத் சோப்ராவும் வந்திருந்து விழாவை கௌரவித்தனர். பாலச்சந்தர் அமீர்கானை பாராட்டி பேசுகையில், “இனி இந்திய சினிமா பாதுகாப்பான கைகளில் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்றார். “அமீர்கானைப் பார்த்துதான் பொறாமைபடுவதாகவும் இந்த படத்தை இயக்கிய அமீருக்கு தான் தலைவணங்குவதாகவும் தெரிவித்தார்”.

அமீர்கான் பேசுகையில், “விருது பெறும் இந்த தருணத்தில் என் தாய் இருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார்” என்று தொடர்ந்து பேச முடியாமல் கண் கலங்கினார்.

விழாவில் பேசியதை பாலசந்தர் எழுதி வைத்திருந்தார். அதை அமீர்கான் வாங்கி, “இதை நான் பத்திரமாக வைத்திருப்பேன்” என்றார்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.