ஜப்பானிய அசானோவுக்கு காதல் பயிற்சி தரும் அசின்!
ஜப்பானின் பிரபல நடிகர் தடானோபு அசானோவுடன் ஒரு புதிய ஆங்கில -ஜப்பான் மொழிப் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தில் அசானோவுடன் ஜோடியாக நடிக்கப் போகிறவர் நம்ம ஊர் அசின்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஜன கண மன… இசை ஆல்பத்தை தயாரித்து இயக்கியவர் பரத்பாலா. இவர் தயாரித்து, இயக்கவிருக்கும் படம் 19 ஸ்டெப்ஸ்.
ஆங்கில - ஜப்பானிய மொழிகளில் தயாராகும் இதில் ஹீரோவாக தடானோபு அசானோ நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அசின் நடிப்பார் என்று தெரிகிறது. இவர்களுடன் முக்கியப் பாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது. பரத் பாலா, வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளார். மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய கதை இது.
9-ம் நூற்றாண்டில் கேரளாவில் நடக்கும் இந்தக் கதையில் கேரளாவின் பாரம்பரிய தற்காப்புக் கலையான களரிப்பயட்டுவை அசானோவுக்கு கற்றுத் தரும் கவுரவ வேடத்தில் நடிக்கிறாராம் கமல்.
இந்த வித்தையைக் கற்றுக் கொண்டு, அதன் மூலம் தனது எதிரிகளை அசானோ வீழ்த்துகிறாராம்.
அசினுக்கு இதில் கேரளா ராணி வேடம். களரிப் பயட்டு கற்க வரும் அசானோவுக்கு காதல் பயிற்சி அளிக்கும் கவர்ச்சி ராணி இவர்.
இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இவ்வளவு தகவல்கள் உறுதியாகக் கூறப்பட்டாலும், படத்தில் நடிப்பது குறித்து கமல் இன்னமும் உறுதியாக எதையும் தெரிவிக்கவில்லை.
அவரது மீடியா மேனேஜர் நிகில் முருகனும் இது குறித்து இப்போது எதுவும் கூறுவதற்கில்லை என்கிறார்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply