தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரு புதிய படத்தை இயக்குகிறார் மணிரத்னம். இந்தியில் அபிஷேக், கோவிந்தா நடிக்கிறார்கள். அபிஷேக் பச்சன் பாத்திரங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விக்ரம் நடிக்கிறார்.
ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்துக்கு ராவண் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தமிழில் இது ராவணன் என வரக்கூடும்.
மூன்று மொழிகளிலும் ஐஸ்வர்யா ராய் தான் கதாநாயகி. மற்றும் கோவிந்தா நடிக்கும் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார். மற்றொரு முக்கிய பாத்திரத்தில் கார்த்திக் மற்றும் பிரியாமணி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு மணகண்டன்.
இந்தப் படத்தை ரூ.120 கோடி செலவில் அனில் அம்பானியுடன் இணைந்து தயாரிக்கிறார் மணிரத்னம். மத்தியப் பிரதேச காடுகளில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply