முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
இளையராஜாவின் இசை விளக்கம்!

இளையராஜாவின் இசை விளக்கம்!

ஐதரபாத்தில் ‘மல்லப்புவ்வூ’ தெலுங்கு படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா நடந்தது.

அதில் பங்கேற்ற இளையராஜா, “பறவை பறப்பது போல் கம்யூட்டரில் வரையலாம். ஆனால் நிஜமாகப் பறவை பறந்தால் எப்படி இருக்கும்? அதுபோலத்தான் இதுவும்…” என்றார். 

எதற்கு, எதனை ஓப்பிட்டுப் பேசினார், என்கிறீர்களா?

“இன்றைய இசையமைப்பாளர், எப்படி இசையமைக்கிறேன், எப்படி மெட்டு அமைக்கிறேன் என்பதை பேட்டிகளில் கூறுகிறார்கள். அனைத்து இசை அமைப்பாளர்களுமே இசையை உருவாக்க முயல்கிறார்கள். ஆனால் நான் உருவாக்குவதில்லை. அது தானாகவே எனக்குள் நுழைகிறது” என்கிறார், இளையராஜா.

இப்படத்தை முரளி கிருஷ்ணா மற்றும் பூமிகா நடிக்க, சமுத்ரா இயக்கி உள்ளார்.

இப்படத்தில் இளையராஜாவின் இசையில் 8 பாடல்களுமே தித்திக்கும் ரகம்.

இசைக்கு மொழி ஏது?






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.