முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
சங்குப் பூ - பல பயன்களை உள்ளடக்கியது!

சங்குப் பூ - பல பயன்களை உள்ளடக்கியது!

நீலம், வெள்ளை என்று இரு வகைகளில் காணப்படும் சங்குப் புஷ்பத்தின் செடி
அதிக நன்மைகளைக் உள்ளடக்கியது.

இதோ சங்குப் பூச்செடியின் பயன்கள் பின்வருமாறு:

காமாலை குணமாக சங்குப்பூவின் வேரையும் கீழாநெல்லி வேரையும் சேர்த்து
அரைத்து, வெள்ளாட்டுப் பாலுடன் கலந்து அருந்தலாம்.

வெள்ளைப்படுதல், தலை தொடர்பான நோய்கள், காய்ச்சல், மாந்தம், கண்நோய்,
மலக்கட்டு ஆகியவற்றை வெள்ளை நிற சங்குப்பூவின் வேர் போக்க வல்லது.

விளக்கெண்ணெய் சேர்த்து சங்குப்பூவின் இலையை வதக்கி, பொறுக்கக்கூடிய
அளவிலான சூட்டுடன் யானைக்கால் வீக்கத்திற்கு கட்டிவர நல்ல பலன் தெரியும்.

இஞ்சிச்சாறு மற்றும் சங்கு புஷ்பம் இலைச்சாறையும் சம அளவு எடுத்து அதில்
10,15 மில்லி அளவை உட்கொள்ள இளைப்பு நோயினால் ஏற்படும் வியர்வை தணியும்.

உப்புச் சேர்த்து சங்கு புஷ்பத்தின் இலையை அரைத்து நெறிக்கட்டிகளுக்குப்
பூசி வர வீக்கம் உடனே குறையும்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.