நியூயார்க் : நாம் உண்ணும் உணவுடன் சேர்ந்து சீமை சாமந்திப் பூவில்
தயாரான மூலிகை தேநீரையும் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் நம்மை அண்டவே
அண்டாதாம்.
சாமந்திப்பூ தேநீர் அருந்துவதால் நீரிழிவு நோய் வராது, மேலும் நீரிழிவு
நோயினால் ஏற்படும் பார்வையிழப்பு, நரம்பு பாதிப்பு மற்றும் சிறுநீரக
கோளாறு போன்றவையும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர், ஜப்பான்
ஆராய்ச்சியாளர்கள்.
ஆராய்ச்சியாளர்கள் மேலும் பேசுகையில்,
“உலகளவில் டைப்-2 வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை
அதிகமாகி உள்ளது.
ஜலதோஷம், மாதவிலக்குக் கோளாறுகள், மன அழுத்தம் என்று பல பிரச்சனைகளைப்
போக்க சீமை சாமந்திப்பூ பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருவது
குறிப்பிடத்தக்கது.
இவ்வகையில் நாம் உண்ணும் உணவுடன் சாமந்திப்பூவில் தயாரான மூலிகை
தேநீரையும் சேர்த்து அருந்தி வந்தால் நீரிழிவு நோய் வரவே வராது.
இவ்வகை பரிசோதனையை எலிகளிடத்தில் செய்துப் பார்த்ததில் அவற்றின்
ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாக குறைந்து இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பரிசோதனைகளின் மூலம் இவை உறுதி
செய்யப்பட்ட விட்டால் சாமந்திப்பூவிற்கும் கடும் கிராக்கி ஏற்படலாம்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply