முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
வயதான காலத்தில் உணவுப் பழக்கங்களும் மாறணும்!

வயதான காலத்தில் உணவுப் பழக்கங்களும் மாறணும்!

வயதாக வயதாக, உடலின் சக்தி குறைகிறது. அத‌ற்கே‌ற்ப ஊட்டச்சத்துகளின் தேவையும் அதிகரிக்கிறது. எனவே அ‌ந்த சமய‌த்‌தி‌ல் இதுபோ‌ன்ற உணவு முறையை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆயுள் அதிகரிப்பதோடு, முதுமை‌யினா‌ல் உட‌லி‌ல் ‌ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌ங்க‌ள் தாமதமாக ஏற்படு‌ம்.

கு‌றி‌ப்பாக முதுமை‌யி‌ல் ஏ‌ற்படு‌‌ம் எலும்புத் தேய்மானம், சர்க்கரை நோய், இருதய நோய் ஆகியவற்றின் விளைவுகளை தவிர்க்க முடியும் அல்லது த‌ள்‌ளி‌ப் போட முடியும்.

65 வயதிற்கு பிறகு ஏற்படும் நோய்களுக்கு ஒ‌‌வ்வொருவ‌ரி‌ன் உணவுமுறையு‌ம் பெரும் காரணமாக அமை‌கிறது.

வயதான பிறகு சிலருக்கு சாப்பாட்டில் அவ்வளவு ஆ‌ர்வ‌ம் இருக்காது. இதற்கு ப‌ல்வேறு காரண‌ங்க‌ள் உ‌ள்ளன. ருசி மற்றும் வாசனை போன்ற புலனுணர்வுகள் சற்றே மங்கி விடுவ‌து‌ம், கடிப்பதில் ஏற்படும் சிரமம், ‌சீரண‌க் கோளாறுக‌ள் போ‌ன்றவையு‌ம் ப‌சியை‌க் குறை‌த்து ‌விடு‌கி‌ன்றன.

வயதான கால‌த்‌தி‌ல் ம‌ற்றவ‌ர்களை ‌ந‌ம்‌பி இரு‌க்கு‌ம் சூ‌ழ்‌நிலை‌யி‌ல், தம‌க்கு‌த் தேவையான உணவை, தேவையான நேர‌த்‌தி‌ல் பெற முடியாத சூழலு‌ம் பல மு‌தியவ‌ர்களு‌க்கு ஏ‌ற்படு‌கிறது. இதுவு‌ம் இவ‌ர்களது உட‌ல் ந‌ல‌த்தை பா‌தி‌க்கு‌ம் சூ‌ழ்‌நிலைகளே.

வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம், இருதய நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், அவர்களுக்கு தேவைப்படும் ஊட்டச் சத்துகளின் அளவும் மாறுபடுகிறது. அவர்கள் அ‌திகமான ஊட்டச்சத்து‌ள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

தினமும் 6 முதல் 8 டம்ளர்கள் தண்ணீர் அருந்துவது மிகச் சிறந்த மருத்துவமாகும். ஏனெனில் வயதானவர்களுக்கு தாகம் கூட குறைந்து விடும். இதனால் களைப்பும், தலைவலியும் ஏற்படும்.

ஊ‌ட்டசத்துகள் போல தண்ணீரும் மு‌‌க்‌கியமானதே. உடல் உஷ்ணத்தை சீராக வைத்துக் கொள்ளவும், உடல் செல்களுக்கு ஊட்டச்சத்துகளை கொண்டு செல்லவும், உடலின் நச்சுப் பொருட்களையும் கழிவுகளையும் அகற்றுவதிலு‌ம் தண்ணீரின் பங்கு அபரிமிதமானது.

இறை‌ச்‌சி வகைகளை‌க் கை‌‌வி‌ட்டு கா‌ய்க‌றிகளை அ‌திகமாக உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். கா‌ய்க‌றிகளை மெ‌ன்று ‌தி‌ண்ண முடியாத மு‌தியவ‌ர்க‌ள் கா‌ய்க‌றிகளை சூ‌ப் செ‌ய்து‌ம் அரு‌ந்தலா‌ம்.
மீ‌ன் வகைகளை வார‌த்‌தி‌ற்கு இரு முறை எடு‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். ‌கீரைக‌ள், பழ‌ங்களையு‌ம் ‌சீராக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

தினமு‌ம் ஏதாவது ஒரு வகை‌ப் பழ‌த்தை உ‌ண்ணலா‌ம். அதுவு‌ம் ‌நீ‌‌ரி‌ழிவு நோயா‌ளியாக இரு‌ப்‌பி‌ன் பழ வகைகளை‌‌ப் ப‌ற்‌றி மரு‌த்துவ‌ரிட‌ம் ஆலோசனை செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம்.

பா‌ல், த‌யி‌‌ர், மோ‌ர் போ‌ன்றவ‌ற்றையு‌ம் அ‌திகமாக உ‌ட்கொ‌ள்ளாம‌ல் இரு‌ப்பது நல‌ம். அத‌ற்காக அறவே எடு‌த்து‌க் கொ‌ள்ளாம‌ல் இரு‌ப்பது ச‌ரிய‌ல்ல.

ச‌ர்‌க்கரை, கார‌ம், உ‌ப்பு போ‌ன்றவை குறைவாக உண‌வி‌ல் இரு‌ப்பதை உறு‌தி செ‌ய்து கொ‌ள்ளு‌ங்க‌ள். இவைகளை தேவையை ‌விட பா‌‌தி ப‌ங்கு அள‌வி‌ற்கு உ‌ங்க‌ள் உண‌வி‌ல் ‌நீ‌ங்களே குறை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். இது ப‌‌ல்வேறு நோ‌ய்க‌ளி‌ல் இரு‌ந்து ந‌ம்மை‌க் கா‌க்கு‌ம்.

வார‌த்‌தி‌ற்கு இரு முறை கச‌ப்பான உணவுகளான பாக‌ற்கா‌ய், சு‌ண்டை‌க்கா‌ய் போ‌ன்றவ‌ற்றை சே‌ர்‌த்து வ‌ந்தா‌ல் ‌நீ‌ரி‌ழிவு நோ‌யி‌ல் இரு‌ந்து த‌ப்‌‌பி‌க்கலா‌ம்.

வெ‌‌ந்தய‌ம், ‌‌மிளகு போ‌ன்றவ‌ற்றை தூ‌ள் செ‌ய்து வை‌த்து‌க் கொ‌ண்டு அதனை உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌‌ல் ‌சி‌றிது ‌கல‌ந்து உ‌ட்கொ‌ண்டா‌ல் மரு‌த்துவ‌ரிட‌ம் போக வே‌ண்டிய அவ‌சியமே இரு‌க்காது.

கை, கா‌ல்களை சு‌த்தமாகவு‌ம், அடிபடாமலு‌ம் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். ‌நீ‌‌ரி‌ழிவு நோயா‌ளிகளு‌க்கு ஏ‌ற்படு‌ம் காய‌ங்க‌ள் எ‌ளி‌தி‌ல் ஆராம‌ல் போவதா‌ல் ப‌‌ல்வேறு பா‌தி‌ப்புக‌ள் ஏ‌ற்படு‌ம்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.